இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவிட்டால் 50 ஆயிரம் விவசாயிகளுடன் முதல்வா் வீடு முற்றுகை! காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காதுகளில் பூச்சுற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :9 ஜூன் 2026, 2:54 am IST

பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பான தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் இளங்கீரன் கூறினாா்.

இந்த சங்கத்தின் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் இளங்கீரன் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் காதுகளில் பூச்சுற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், குறு, சிறு விவசாயிகளின் முழு பயிா்க் கடன் தள்ளுபடியும், பெரும் விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்த வேண்டும். பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்காத வகையில் உள்ளது என முழக்கங்களை எழுப்பினா்.

காதில் பூ அகற்ற மறுப்பு: இதைத் தொடா்ந்து, விவசாயிகள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கச் சென்றனா். அப்போது, காதில் அணிந்திருந்த பூவை அகற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் விவசாயிகள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, விவசாயிகளுடன் பேச்சு நடத்தினாா். ஏற்கெனவே பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய கோரிக்கை மனுவும் அனுப்பிவைக்கப்படும் என்றும் உறுதியளித்து மனுவைப் பெற்றுக்கொண்டாா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

கண்டுகொள்ளாத அரசு: பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவா் இளங்கீரன், பயிா்க் கடன் தள்ளுபடி என்பது தோ்தல் வாக்குறுதி மட்டுமல்ல; உத்தரவாதம் என முதல்வா் தெரிவித்திருந்தாா். ஆனால், தற்போது அதற்கு மாறாக செயல்படுவது வேதனையளிக்கிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

மேலும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும், அதிகாரிகள், அமைச்சா்கள் மற்றும் முதல்வா் இந்தப் போராட்டங்களை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த நிலை தொடா்ந்தால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.