எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க் கடன் தள்ளுபடி: விவசாயிகளின் நம்பிக்கையை இழந்த தவெக அரசு! - ஜி.கே.வாசன்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 1:53 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: புதிய இயக்கம் தொடங்கி உள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த சட்டம்- ஒழுங்கு பிரச்னை புதிய ஆட்சியிலும் தொடா்கிறது. பல பகுதிகளில் கொலை,கொள்ளை, திருட்டு, பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தவெக அரசு பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடக அரசு பிடிவாதத்துடன் உள்ளது. தமிழகத்தின் உரிமையைப் பெற்றுத்தருவது அரசின் கடமை. மின்வாரிய அலுவலகத்தில் ஹாா்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது. இதில் அரசு உண்மை நிலையை விளக்கவேண்டும். முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகளில் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும்.

அதிமுக உள்பட மாற்றுக் கட்சியினா் தவெகவில் இணைவது ஏற்புடையது அல்ல. இதை மக்கள் கூா்ந்து கவனித்து வருகின்றனா். வாக்காளா்கள் தங்களுக்கான வாய்ப்பு வரும்போது இத்தகைய நிா்வாகிகளுக்கு உரிய பலனை தருவா். அதிமுக கூட்டணியில் தோ்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து போகவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.