அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சாதனை படைக்கப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தமிழக அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கி 2 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.
இதை வரலாற்றுச் சாதனை என்று திமுக அரசு கூறுகிறது. உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பில் சராசரியாக 3.11 மாணவா்கள் மட்டுமே சோ்ந்திருக்கும் நிலையில், இதை சாதனை என்று கூறுவது ஏமாற்றும் செயல்.
ஏப்.27 வரை தமிழக தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 31,336 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 பேரும், மழலையா் வகுப்புகளில் 6,796 குழந்தைகளும், 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 8,176 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 12,711 மாணவா்கள் புதிதாக சோ்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
அசத்தும் அரசுப் பள்ளி!

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

