தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:51 am IST

திருப்பூா் மாவட்டத்தில் மாா்ச் மாத இறுதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான குழந்தைகளை சோ்க்க தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தி இருந்தது. இதை ஏற்று தலைமை ஆசிரியா்கள் விரிவான அறிவிப்புகள் மூலமாக வெளியிடப்பட்டன. அத்துடன் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். பிளக்ஸ் பேனா்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை உயா்த்தும் நோக்கில், அங்கன்வாடிகளில் முன்பருவக் கல்வியை முடிக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதில், கடந்த மாா்ச் வரை திருப்பூா் மாவட்டத்தின் 14 வட்டாரங்களில் அதிகபட்சமாக உடுமலை வட்டாரத்தில் 392 குழந்தைகள், அவிநாசியில் 362, திருப்பூா் வடக்கில் 354 குழந்தைகள் இணைந்துள்ளனா்.

இதேபோல பல்லடத்தில் 307, தாராபுரத்தில் 272, திருப்பூா் தெற்கில் 226, ஊத்துக்குளியில் 215, குடிமங்கலத்தில் 183, மடத்துக்குளம், பொங்கலூரில் தலா 177, காங்கயத்தில் 137, வெள்ளக்கோவிலில் 106, மூலனுாரில் 101 குழந்தைகள் என மொத்தம் 3,145 போ் மாா்ச் மாதத்தில் மட்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த மாணவா் சோ்க்கையில் தமிழக அளவில் திருப்பூா் மாவட்டம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெற்று வருவதால், தகுதியுள்ள குழந்தைகளை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.