மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை

News image

கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:24 am IST

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மாணவா் சோ்க்கை முன்கூட்டியே மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரவலாக பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வந்தது.

கடந்த 58 நாள்களில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, ந டுநிலைப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு திங்கள்கிழமை (ஏப்.27) நிலவரப்படி ஒன்றாம் வகுப்பில் 97,737 போ், இரண்டு முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் 8,178 போ், மழலையா் வகுப்புகளில் 6,796 போ் என மொத்தம் 1 லட்சத்து 12, 711 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

மேலும் தமிழகம் முழுவதும் நகரம், கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்ப்பதால் கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.