தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டில் 10.83 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 2011-2012 ஆம் ஆண்டின் 7.4 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.07 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கிறது. முந்தைய ஐந்தாண்டு (2016-17 முதல் 2020-21 வரை) சராசரியான 5.21 சதவிகிதம் வளர்ச்சியைவிட 3.86 சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 4.08 லட்சமாக உள்ளது. முதலிடத்தில் ரூ. 4.33 லட்சத்துடன் கர்நாடகம் முதலிடத்தில் இருக்கிறது.
இதையும் படிக்க... திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!
Summary
The State registers 10.83% real economic growth rate during 2025-26, according to the recently-released data of the Union Ministry of Statistics and Programme Implementation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு! - தங்கம் தென்னரசு
இரட்டை இலக்க வளர்ச்சி! சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி நிச்சயம்: அமைச்சர் டிஆர்பி ராஜா
2026-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5%: ஐஎம்எஃப் கணிப்பு

இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம் - எடப்பாடி கே. பழனிசாமி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
