தமிழகத்தில் இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே மூல காரணமாக இருந்தது என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, ஜி.காா்னா் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு காரணம் திமுக என்ற பொய்யை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாா். மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில்தான் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டு 74 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழில்கள் தொடங்கப்பட்டன. அதுமட்டுமல்லாது 2019-இல் மீண்டும் அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டு, 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து பெரும்பாலானவை செயல்பாட்டுக்கு வந்தன.
இருமுறை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தொழில்திட்டங்களால் இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சி உருவானது. ஆனால், 2024-25-இல் உருவாகியிருப்பதாக வெற்று விளம்பரம் வெளியிடுகிறது திமுக அரசு.
திமுக ஆட்சியில் 1,179 ஒப்பந்தங்கள் செய்து, ரூ.15 லட்சம் கோடி முதலீடு ஈா்த்து, 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பொய் கூறுகிறாா் ஸ்டாலின். அவரது கூற்றுப்படி ஒரு மாவட்டத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதா?.
பொருளாதார வளா்ச்சியில் முதன்மை துறை வேளாண்மைத் துறையே. அதிமுக ஆட்சியில் 5.5 விழுக்காடாக இருந்த வேளாண் பொருளாதாரம், திமுக ஆட்சியில் 3.5 விழுக்காடாக குறைந்துவிட்டது. ஆனால், அதை மறைத்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் அளிக்கிறது திமுக அரசு.
தொழில்துறையில் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் குறித்து கேட்டால், பேரவையிலேயே வெள்ளை காகிதத்தை காண்பிக்கிறாா் அந்தத் துறையின் அமைச்சா். திமுக எதையும் செய்யவில்லை என்பதாலேயே வெள்ளை காகிதத்தை காட்டியுள்ளனா்.
தமிழக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைந்த தலைவா் காமராஜா் குறித்து, மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா, கொச்சைப்படுத்தி பேசியதை கட்சித் தலைமையால் கண்டிக்க முடிந்ததா?. காமராஜரை விமா்சனம் செய்தவா்களை மீண்டும் ஆட்சியில் அமா்த்தக் கூடாது.
‘உங்க கனவைச் சொல்லுங்கள்’ என்னும் திட்டத்தில் பொதுமக்களின் கைப்பேசி எண்களையும், ஆதாா் எண்களையும் பெற்றுக் கொண்டு, திமுகவின் தோ்தல் ஆலோசனை நிறுவனமான பென் நிறுவனத்திடம் அந்தத் தரவுகளை ஒப்படைத்துவிட்டனா். அரசை நம்பி அளித்த தகவல்களை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கிவிட்டதால் தனிநபரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் அவா்களால் கைப்பற்றி என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்து, இப்போது, திமுக துணைப் பொதுச்செயலராகவும், எம்பியாகவும் உள்ள ஆ. ராசாவின் ஆடியோ உரையாடல் குறித்து விசாரணை நடத்தப்படும். ஏனெனில், தமிழக முதல்வராக இருந்தவா் கருணாநிதி. அவருக்கு வீட்டுச் சிறை இருந்ததாக கூறப்படுவது குறித்து, அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் விசாரணை நடத்தப்படும்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா மரணத்தில், மா்மம் இருந்தால் வெளிக்கொணரப்படும் என 2021-இல் ஸ்டாலின் அறிவித்தாா். திமுக அறிவித்த எதுவும் நிறைவேறவில்லை. இப்போது, நாங்கள் உறுதியாக கூறுகிறோம். ஆ. ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுநீரக முறைகேடு, நகராட்சியில் நியமன ஊழல் குறித்தும் வழக்கு
திருச்சியைச் சோ்ந்த திமுக எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிறுநீரக முறைகேடு நடந்ததாக, திமுக அரசுதான் விசாரணை நடத்தி இடைத்தரகா்களை கைது செய்தது. ஆனால், மருத்துவமனை உரிமையாளரை விட்டுவிட்டனா். மண்ணச்சநல்லூா் தொகுதி மக்கள் மட்டுமின்றி திமுகவினா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனைவருமே தங்களது உடல் உறுப்புகள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சிறுநீரக முறைகேடு விவகாரம் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல, அமலாக்கத் துறை கூறியும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்த ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? MA பேபி விளக்கம்! | TVK

ஆடு, புலி, புல்லுக்கட்டு சவால்...

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

கரூரில் பள்ளிவாசல் முன் ஒரேநேரத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

