தமிழகத்தில் வேலூா், ஈரோடு உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.56, திருச்சி - 102.38, மதுரை விமானநிலையம், தருமபுரி - (தலா) 102.2, மதுரை நகரம் - 101.84, திருப்பத்தூா் - 100.58, நாமக்கல் - 101.3, சேலம் - 100.76, திருத்தணி - 100.58 டிகிரி என 11 இடங்களில் வெயில் சதமடித்தது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) முதல் ஏப். 29-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரை தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஏப். 26, 27) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

