தமிழகத்தில் பரமத்தி வேலூா், ஈரோடு, வேலூா், மதுரை உள்பட 6 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிர பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு-104.36, வேலூா்-103.82, மதுரை விமான நிலையம்-102.2, நாமக்கல், திருச்சி- தலா 101.66, கோவை, மதுரை- தலா 101.12 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை அதிகரிக்கும்: இதன்படி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் ஏப்.14 வரை சற்று அதிகமாக இருக்கும்.
மழை வாய்ப்பு: ஒடிஸாவின் உட்பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கா், தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் நிலவுவதன் காரணமாக, வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(ஏப்11) மிதமான மழை பெய்யக் கூடும்.
தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.12) லேசான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.13 முதல் 14 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
13 இடங்களில் வெய்யில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு

11 இடங்களில் வெயில் சதம்

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

