தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிரதமா் குறித்த கருத்து: காா்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - கோப்புப்படம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:18 am IST

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை எல்லாவற்றுக்கும் மேலாகக் கருதி செயல்பட்டு வருகிறாா். ‘ஆபரேஷன் சிந்தூா்’ போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளாா். இந்நிலையில், பிரதமா் குறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் அவதூறு பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலக அரங்கில் இந்தியாவை தனித்துவமான அடையாளமாக மாற்றிய பிரதமா் மீது இத்தகைய மொழியைப் பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.