முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19.04.2026) அண்ணா அறிவாலயத்தில் “சென்னை சூப்பர்-6” எனும் திராவிட மாடல் 2.O வாக்குறுதிகளை வெளியிட, கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம்-அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்னைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் (Global Talen Gateway) ஆகிய தலைமைப்புகளிலான “திராவிட மாடல் 2.O வாக்குறுதி”களை வெளியிட்டார்.
அதுபோது சென்னையில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் உடனிருந்தனர்.
திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகள்
• நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
• மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
• அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
• கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.
சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து
• பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
• போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்
• எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
• மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.
• மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
• பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
• அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.
மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரசனைக்குத் தீர்வு
• விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும்
நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
• தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
உலகளாவிய சிறப்பு மையம்
• Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologiesக்கான சிறப்பு மையம்
• ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
• 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்
உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway)
• உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு
• உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
• ஆராய்ச்சி மையம்
• அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்
Summary
Chief Minister M.K. Stalin released the 2.O DMK election manifesto for Chennai district today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


