தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது உறுதி என தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.
திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது பலனடையும் வகையில் திட்டங்கள் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்திற்கு பிரதமா் எத்தனை முறை வந்தாலும், தொடா்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது. பாஜக, அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தமிழக வாக்காளா்களிடைய வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவாா்கள்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், நெசவாளா்கள், மீனவா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உழைக்கும் மகளிா் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து வகைகளிலும் செயல்படும் திமுக கூட்டணியை இந்த தோ்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி! எடப்பாடி பழனிசாமி!

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

