தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கே இடம்பெற்றிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, வாக்குப் பதிவு இயந்திரங்களை சோதனை செய்து, அதில், வேட்பாளர்களின் பெயர் பட்டியல்களை இணைக்கும் பணியும் நடைபெறவிருக்கும் நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த வேட்பாளர்களின் பட்டியல்கள் தயாராகி விட்டன.
வேட்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட கட்சி, மத்திய, மாநில கட்சிகளின் வரிசை மற்றும் பெயர்களின் அகர வரிசைப்படி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஜோசப் விஜய் என்ற பெயரின் முதல் எழுத்து தமிழ் எழுத்தாக இல்லாத நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் 16-வது இடத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வரிசையில் கடைசி வேட்பாளராக ஜோசப் விஜய் பெயர் இடம்பெறும் என்றும், பெரம்பூர் தொகுதியில் வைக்கப்படும் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், முதல் இயந்திரத்தின் கடைசி பெயராக தவெக தலைவர் விஜய் பெயர் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் பெயர் அங்குள்ள வேட்பாளர்களின் பட்டியலில் 13வது இடத்தில் வருகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே, திருச்சி கிழக்கு தொகுதியிலும் முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே விஜய் பெயர் இடம்பெற்றுவிடும் என்று தெரிகிறது.
Summary
Regarding where TVK leader Vijay's name will appear in the Perambur voting machine..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

மக்கள் மனதைவிட, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடம் பிடிப்பதே முக்கியம்! ஏன்?
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

