வாக்காளர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படித்தான் பெயர்கள் அச்சிடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பட்டியல் பொருத்தப்படுகிறது.
முதலில், மத்திய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறும். அடுத்து, அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்து இடம்பெறும். சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் இறுதியாக இடம்பெறும். கடைசியாக நோட்டாவுக்கு இடம் கிடைக்கும்.
இவ்வாறு வேட்பாளர்களின் பெயர்கள் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவில் உள்ள பெயர்களும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படுகிறது.
இதில், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அமைகிறது, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். இவ்வாறு அதிகபட்சமாக 24 இயந்திரங்கள் வரை இணைக்க முடியுமாம்.
தற்போது நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இங்கு 80 வேட்பாளர்கள் உள்ளன.
பொதுவாக, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் இடம்பெறும் இடமும்கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இளம்தலைமுறையினர் முன்கூட்டியே வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் எங்கே இருக்கிறது என்று பார்த்துக் கொள்வார்கள். ஆனால் முதியவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று பிறகுதான் வேட்பாளர்களை தேடுவார்கள் என்றால், சற்று சிரமம்தான்.
அதிலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் பெயர் கிடைத்துவிட்டால், அந்த வேட்பாளர்களுக்கு ஜாக்பாட்தான். அதிலும் சில கிராமங்களில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் செல்பவர்களாக இருந்தால், முதலில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கும் அதிக வாக்குகள் விழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட கடைசி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் பெயர்களுக்கும் சற்று சவால்தான் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.
இவர்களை எல்லாம் விட, இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடுவில் இடம்பெற்ற அதிகம் பிரபலமடையாத வேட்பாளர்களின் பெயர்களை வாக்காளர்கள் பார்க்கக் கூட நேரமிருக்காது என்றே கூறப்படுகிறது.
எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளரின் பெயர் எங்கே இடம்பெறுகிறது என்பது கூட, அவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கலாம் என்றே இப்போதும் கருதப்படுகிறது.
Summary
About where you are placed in the voting machine is important..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு இயந்திரத்தில் தாமரைச் சின்னம் பொத்தான் மீது ‘டேப்’... பரபரக்கும் மே.வங்க தேர்தல் களம்!
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?

சீனாவின் விஷமத்தனம்...

தேர்தலில் பெண்களை வேட்பாளராக்க என்னதான் பிரச்னை?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


