தமிழ்நாட்டில் இதுவரை பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவியை நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் வந்த கும்பல், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியைக் குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இதுதான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பதுதான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வர வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான பொறுப்பு இல்லாத, என்ன நடக்கிறது என்று ஐடியா-வே இல்லாத ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்றே ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆக வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Has Stalin spoken about women's safety in Tamil Nadu so far? edappadi palanisamy asks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார் மு.க. ஸ்டாலின்: அமித் ஷா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

