மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

மீஞ்சூரில் மாணவியை இளைஞர்கள் அரிவாளால் வெட்டியது பற்றி...

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 1:43 pm IST

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகம், எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அருகே வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் தேர்வுக்காக நேற்றிரவு (ஏப். 14) படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கஞ்சா போதையில் மாணவியில் வீட்டுக்குள் புகுந்த மூன்று இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாணவியை மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதில், படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய இளைஞர்களை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Sexual Assault on Student in Minjur! Youths Attack with Machetes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.