மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்

காங்கிரஸ் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பதில்

News image

டி.கே.சிவகுமார் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 5:15 pm IST

உண்மையான காங்கிரஸ் தங்கள் பக்கம் இருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பதில் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நேற்று நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டபோது, 'தமிழக காங்கிரஸை பல கோடிகள் கொடுத்து முதல்வர் தன் பைக்குள் போட்டுக்கொண்டார், ஆனால் உண்மையான காங்கிரஸ், தவெக பக்கம் இருக்கிறது' என்று பேசினார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

"தவெக தலைவர் விஜய் ஒரு முதிர்ச்சியற்ற தலைவர், அவருக்கு முதிர்ச்சி இல்லை.

விஜய்யுடன் இருப்பது தமிழ் மாநில காங்கிரஸாக இருக்கலாம், காங்கிரஸ் கட்சி, விஜய்யுடன் இல்லை. காங்கிரஸ் கட்சி, திமுகவுடன்தான் இருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும்.

எங்கள் தொகுதி எண்ணிக்கையை திமுக குறைக்கச் சொன்னாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம்" என்று பேசினார்.

காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலின்பேரிலேயே விஜய்யைச் சந்தித்ததாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

DK shivakumar reply on vijay comments about congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.