தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் புகார்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 7:33 am IST

தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, விஜய்க்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என விஜய்யிடம் ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிஜிபி-யிடம் சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான டில்லிபாபு புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது, தவெக தலைவர் விஜய்யும் அவரது கட்சியின் வேட்பாளர்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக மக்கள் எதிர்பார்த்த இந்த வெற்றியை உறுதிசெய்து, விஜய் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அவருக்கு எதிராக பாஜக நெருக்கடி கொடுத்து வருவதுடன், அரசியல் சூழ்ச்சியும் செய்து வருகின்றனர்.

விஜய்க்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலையில், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress files complaint with DGP, alleging a threat to Vijay's life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.