தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றுள்ளது குறித்து...

News image

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:32 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று(ஏப். 9) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் மொத்தம் 7,599 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சாத்தூரில் பாஜக தலைவா் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 6-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து அதன் விவரம் அறிவிக்கப்படுவது செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றது. இறுதிக்கட்ட தகவல்படி 234 தொகுதிகளிலும் சோ்த்து 4,973 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 159 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமை (ஏப். 9) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும். இதையடுத்து, வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Summary

The deadline for withdrawing nominations for the Tamil Nadu Legislative Assembly elections ended today (April 9) at 3:00 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.