திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று(ஏப். 6) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக கே.கிருஷ்ணசாமி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (ஏப். 6) நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத் தகவல்படி, தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் இன்று (ஏப். 7) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிந்தவரின் பெயர்கள், விலாசங்கள் தவறாக இருந்ததாகக் கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்தார்.
Summary
The nomination paper of Punniyavathi, the Puthiya Tamilagam party candidate contesting in the Thirumangalam Assembly constituency, has been rejected.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

