நமது சிறப்பு நிருபர்
தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்.சாய் குமாரை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையத்தின் செயலர் லதா திரிபாதி அனுப்பிய கடிதத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மறுஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசின் தலைமைச் செயலராக 1990-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சாய் குமாரை நியமிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொறுப்பில் இருந்து மாற்றப்படும் அதிகாரிகள் மறுஉத்தரவு வரும் வரை எவ்வித தேர்தல் தொடர்புடைய பணிகளிலும் நியமிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தின் செயலர் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை காவல் துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற 1995-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்தப் பொறுப்பில் மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் இதுவரை பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற சில மணி நேரத்தில் இணைய குற்றத் தடுப்பு (சைபர் கிரைம்) தலைமை இயக்குநராக இருந்த சந்தீப் மிட்டலை ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை தலைமை இயக்குநராக நியமித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸôம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அதன் பார்வையாளர்கள்மூலம் கண்காணித்து வருகிறது.
இதையொட்டி, ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலரை மாற்றி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றிவிட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நியமிக்க உத்தரவிட்டது.
வழக்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்து வந்த ஆயுதப் படை டிஜிபி பொறுப்பு தேர்தல் பணியுடன் தொடர்புள்ள பணி என்றபோதிலும், தேர்தல் பணி அல்லாததாகக் கருதப்படும், அவர் வகித்து வந்த ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் பணிக்கும் சேர்த்து சந்தீப் மிட்டல் என்ற உயரதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க உத்தரவிட்டிருப்பது புதிய முன்மாதிரி நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

The Election Commission has issued an order transferring Tamil Nadu Chief Secretary Muruganandam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


