நமது சிறப்பு நிருபர்
தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச்.ஓ.பி.எஃப்.) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவை திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு எழுதிய நான்கு பக்க கடிதம், அவரது சார்பில் தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின் கீழ், தேர்தல்களைச் செவ்வனே நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும். தேர்தலின்போது நடுநிலைமையைக் காக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும், தான் விரும்பும் உயதிகாரியை மாநில காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, அந்த உயதிகாரியை "பொறுப்பு டிஜிபி'-ஆக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் நியமிக்க இயலும்.
மேற்கு வங்கம் போன்ற பிற தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அண்மையில் டிஜிபி மாற்றப்பட்டபோது, அங்கு "பொறுப்பு டிஜிபி' என்றே உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய நியமனங்கள் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முழு நேர மற்றும் காவல் படைத்தலைவராக சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழகத்தை மட்டும் பாகுபாட்டோடு நடத்துவது வெளிப்படையாகியிருக்கிறது.
மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் நியமனத்தின்போது "பிரகாஷ் சிங் வழக்கில்' உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய நியமன நடவடிக்கையை தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. முழு நேர டிஜிபியை நியமிப்பதற்கான வழக்கமான நடைமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சிக்கு வரும் அரசால் மீண்டும் தொடங்கப்படும்.
எனவே, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளை மீறியதாகக் கருதப்படும் சூழலையும், இதன்காரணமாக எழக்கூடிய சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும் வகையில், சந்தீப் ராய் ரத்தோரை முழு நேர டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவராக நியமிக்க ஏப்ரல் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

வாக்காளர் செல்போன்களை வைக்க சிறப்பு வசதி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

‘இலவச’ தேர்தல் அறிக்கைகள்!

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

