சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலத்தின் உள்துறை செயலரை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் உள்துறை செயலராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்த தீரஜ்குமாருக்கு, தேர்தல் தொடர்பான பணிகளை வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் உள்துறை செயலராக இருந்த தீரஜ்குமாரை மாற்றி, மணிவாசனை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் ஐஏஎஸ், உள்துறை செயலர் பதவியை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டிருந்தனர். நேற்று சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்ட நிலையில், இன்று உள்துறை செயலர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்.சாய் குமார் நியமிக்கப்பட்டார்.
தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை காவல் துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற 1995-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்தது.
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டிருந்தார். குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் சென்னையின் புதிய காவல் ஆணையாராக பொறுப்பேற்க உள்ளார்.
Summary
The Election Commission, which has changed the Tamil Nadu Home Secretary, has appointed Manivasan IAS.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு; திமுக உறவு தொடரும்... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டி

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


