நடிகர்களின் வாகனத்தை இளைஞர்கள் பின்தொடரக் கூடாது என்றும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது. இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் உங்களுக்குதான் பாதிப்பு.
இளைஞர்கள் படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
இளைஞர்கள் இதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு படிப்பில் மட்டுமே முழு சிந்தனை இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
குடிப் பழக்கம், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். வாழ்க்கையே கெட்டுப்போய் விடும். இது உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். வாழ்க்கை நரகமாகிவிடும். போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்" என்று கூறினார்.
ஜனநாயகம் படம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, 'சாரி, கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்றார்.
மேலும், ஜெயிலர் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாள்கள் உள்ளது, கமல்ஹாசனுடன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறினார்.
தமிழக பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர் செல்லும் பகுதிகளில் இளைஞர்கள், அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருக்கிறது. நெல்லையில் இன்று விஜய் பிரசாரம் செய்யவுள்ள நிலையில் சிலர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றதில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இளைஞர்கள் தன்னுடைய வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என்றும் விஜய்யும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

டெக்ஸ்லாவில் அபிஷேக் பச்சன்?

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

