நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் சுந்தர். சி விலக, அப்படத்திற்கான இயக்குநராக சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தமானார்.
இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு ஏப். 27 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து முழுப்படப்பிடிப்பும் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
actor rajinikanth's 173 movie shoot will start this apr. 27 at chennai following by promo shoot
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

டெக்ஸ்லாவில் அபிஷேக் பச்சன்?

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


