தேமுதிக துண்டுடன் பதவியேற்க சென்ற எல்.கே. சுதீஷிடம் கட்சித் துண்டை கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபா் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் பாமகவின் அன்புமணி உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சித் துண்டு அணிந்து கலந்துகொண்ட எல்.கே. சுதீஷ் பதவியேற்க அழைத்தபோது துண்டை அணிந்தபடி சென்றார்.
அப்போது, கட்சித் துண்டை கழற்றி வைத்துவிட்டு வந்து பதவி ஏற்குமாறு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
பதவியேற்ற பின்னர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெறச் சென்ற எல்.கே.சுதீஷ், பாக்கெட்டில் வைத்திருந்த விஜயகாந்த் புகைப்படத்தை எடுத்து அவையில் இருந்தவர்களிடம் காண்பித்தார்.
Summary
L.K. Sudheesh Denied Permission to Take Oath Wearing Party Scarf!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?

விஜய்யை பதவியேற்க அனுமதிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

பிகாரில் நிதிஷ்குமாரின் மகன் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்பு!

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


