மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறி வருகிறார்.

PTI
இதனிடையே நாளை (மே 9) பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக பவானிபூர் தொகுதியில் மமதாவைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.

PTI
அக்னி மித்ரா பால் என்பவர் மேற்கு வங்கத்தில் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் வடக்கு வங்காளத்தில் இருந்து ஷங்கர் கோஷ் என்பவருக்கும் துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Summary
Suvendu Adhikari is the new CM of West Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு

ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரி

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

