தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்குமாறு கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் நிர்மல் குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீசப்பட்டது குறித்து நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எங்கள் வேட்பாளர்களுக்கோ தலைவருக்கோ பாதுகாப்பு என்பதே இல்லை. இது வேண்டுமென்றே திமுகவால் உருவாக்கப்பட்ட ஒன்று.
எங்கள் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரத்தில் இடையூறு விளைவிக்கவே இவ்வாறு செய்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணைய தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், முறையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரூரிலும் தவெகவின் பிரசாரத்தில் ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு தரப்பட்டதாகவும் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, "பிரசாரத்தின்போது, பல காலியான அவசர ஊர்திகள் கூட்டத்தினுள்ளே அனுப்பப்பட்டன. திமுக என்னென்ன செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒரு கூட்டம் நடக்கும்போது, கூட்டத்தினுள் 10 அவசர ஊர்திகளை விடுவது, 10 ஊர்திகளும் காலியாகவும், அவற்றின் ஓட்டுநர்களும் முழு போதையில் வருகின்றனர். போதையில் வந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களைப் பிடித்த தவெக நிர்வாகிகள், காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களைக் காவல்துறை காப்பாற்றி அனுப்பி விட்டது" என்றும் நிர்மல் குமார் கூறினார்.
Summary
TVK Leader Nirmal Kumar asks Election Commission to provide proper security for campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
