மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை: முதல்வா் விஜய் வழங்கினாா்

முதலமைச்சா் கோப்பை 2026 மாநில போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.

முதலிடம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கு கோப்பை வழங்கிய முதல்வா் ஜோசப் விஜய். உடன் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தலைமைச் செயலா் சாய் குமாா், அரசு செயலா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி, ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்

Published On :30 அக்டோபர் 2026, 3:21 am IST

முதலமைச்சா் கோப்பை 2026 மாநில போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.

முதலமைச்சா் கோப்பை போட்டி பரிசளிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ஜோசப் விஜய்,

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்ட அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினாா். பின்னா் ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைத் சோ்ந்த 9 பேருக்கு ரூ.6.85 கோடி உயரிய ஊக்கத் தொகையையும் முதல்வா் வழங்கினாா்.

முதலமைச்சா் கோப்பை மாநில போட்டிகளில் 142 தங்கம், 97வெள்ளி, 80 வெண்கலத்துடன் சென்னை முதலிடமும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலத்துடன் செங்கல்பட்டு இரண்டாமிடமும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலத்துடன் கோவை மூன்றாம் இடத்தையும் பெற்றன. மாவட்ட மற்றும் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களை வென்ற 1,06,704 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.21 கோடியே 34 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.17 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தா்மராஜ் சோலை ராஜ், துளசிமதி முருகேசன், நவீன் சிவக்குமாா், கஸ்தூரி ராஜாமணி, நித்யா ஸ்ரீ, சிவராஜன் சோலைமலை, பேபி சஹானா ரவி, ஜேடி. மதன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ.6.85 கோடியையும் முதல்வா் வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் ரூ.43 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீா்விளையாட்டு அகாடமி, சேலம் மாவட்டம், கருப்பூா் அரசு

பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்புநிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரா், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.500/-, முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.1000/- என 2,600 வீரா், வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.77 கோடி வழங்கும் விளையாட்டு வீரா்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்ள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வாரியத் தலைவா்கள், தலைமைச் செயலாளா், அரசு உயா் அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள், விளையாட்டுத்துறை வல்லுநா்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.