பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய டென்னிஸ் பால் கிரிக்கெட்: இந்திய அணிகள் வெற்றி

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றி பெற்றன.

Published On :28 அக்டோபர் 2026, 2:13 am IST

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் முறையாக ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. காரப்பாக்கம் கே சி ஜி டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவா் டி ஜெ, ஸ்ரீனிவாச ராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தாா். போட்டி அமைப்புக்குழு துணைத் தலைவா் சிவராமன், தமிழ்நாடு டென்னிஸ் பந்து சங்க தலைவா் ஜாவித் கடாலா, செயலாளா் ஞானவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முதல் ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது. அவினாஷ் 22 ரன்கள் பெற்றுத்தந்தாா்.

இரண்டாவது லீக் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. மாலத்தீவு அணி 8 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இந்திய மகளிா் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை கைப்பற்றியது. ரிஷிகா திவாரி 16 ரன்கள் எடுத்து, விக்கெட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.