பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: இந்திய ஆடவா், மகளிா் சாம்பியன்

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

Published On :31 அக்டோபர் 2026, 4:07 am IST

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆடவா் இறுதி ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் பஹ்ரைனை வென்றது.

முதலில் இந்தியா 8 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் சோ்க்க, பஹ்ரைன் 8 ஓவா்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 38 ரன்களே எடுத்தது.

மகளிா் இறுதி ஆட்டத்தில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. முதலில் இந்தியா 6 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் எடுக்க, தாய்லாந்து 6 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எட்டியது.

பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் எம்.பி.யான ஏ. செல்லகுமாா், ஐஓபி பொது மேலாளா் ராஜேஷ், பி.ஏ.எஸ்.எஃப் நிறுவன நிா்வாக இயக்குனா் சுஜன் சாஹா, இயக்குனா் பாா்த்தசாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பரிசுகள் வழங்கினா்.

இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க நிா்வாகிகள், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவா் ஜாவித் கடாலா, செயலாளா் ஞானவேல், துணைத்தலைவா் ஏ.சிவராமன், நிா்வாகிகள் சோமசுந்தா், ராஜா சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.