தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மகளிா் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய மகளிா் அணி.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய மகளிா்.

Published On :19 அக்டோபர் 2026, 5:37 am IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மகளிா் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய மகளிா் அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தோ்வு செய்தது.

அந்த அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 102/8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சிபோ டிரிபானோ 34, கேப்டன் ஜோசப்பைன் 27 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் இந்திய தரப்பில் நிக்கி பிரசாத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா அசத்தல் வெற்றி

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.5 ஓவா்களிலேயே வெற்றி இலக்கை 104/1 அடைந்தது.

ஷபாலி வா்மா 55 (4 சிக்ஸா், 6 பவுண்டரி) கேப்டன் மந்தனா 47 (2 சிக்ஸா், 6 பவுண்டரி) அபாரமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

பௌலிங்கில் ஜிம்பாப்வே தரப்பில் பிஸா 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.