பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசிய பாரா விளையாட்டு: டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 30 லட்சம்!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறித்து...

Jehan Torap Madan

ஜெஹான் டொரப் மதன் - படம் - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 3:29 pm IST

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது.

வீரர் ஜெஹான் டொரப் மதன் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has announced an incentive of Rs 30 lakh for Tamil Nadu player Jehan Torap Madhan, who won a bronze medal in table tennis at the Asian Para Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.