முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

பிஎஸ்ஜி அணியின் தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் குறித்து...

News image

சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் லூயிஸ் என்ட்ரிக். - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 3:12 pm IST

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் என்றால் அது லூயிஸ் என்ட்ரிக்தான் என பிஎஸ்ஜி அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கோப்பையை வென்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் என்ட்ரிக் (56 வயது) கடந்த 2023 சீசனில் பிஎஸ்ஜி அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார். முதல் சீசனிலேயே லீக்1ல் கோப்பை வென்ற அவர் சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதிகுக் கொண்டு வந்தார்.

கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வைத்தார். தற்போது இந்த சீசனிலும் சாம்பியன்ஸ் லீக்கை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக பார்சிலோனா அணியை 2015ல் கோப்பை வெல்ல வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிஎஸ்ஜி அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபி கூறியிருப்பதாவது:

இன்று வரலாற்றில் மறக்க முடியாத நாள். அணி, பயிற்சியாளர், அணியில் வேலை செய்பவர்கள், ரசிகர்கள் என அனைவரையும் நினைத்து பெருமையாக இருக்கிறது. நாங்கள் நம்பினோம். நல்லவேளை வென்றுவிட்டோம் கடவுளே. கடந்த சீசனை விட இந்த வெற்றி சிறப்பானது. தொடர்ச்சியாக 2 முறை வெல்வது நம்பமுடியாத விஷயம்.

பிஎஸ்ஜி தலைவர் நாசர் பின் கானிம் அல்-கெலைஃபி (மையத்தில்), விளையாட்டு இயக்குனர் லூயிஸ் காம்போஸ் (இடதுபுறம்)  தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்.

பிஎஸ்ஜி தலைவர் நாசர் பின் கானிம் அல்-கெலைஃபி (மையத்தில்), விளையாட்டு இயக்குனர் லூயிஸ் காம்போஸ் (இடதுபுறம்) தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக். - ஏபி

முன்னாள் பயிற்சியாளர்கள் அனைவருக்காகவும் நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், லூயிஸ் என்ட்ரிக் மிகவும் சிறப்பானவர். ஒரு பயிற்சியாளராக, மனிதராக அவர் அற்புதமானவர். அவர் இந்த உலகின் தலைசிறந்த பயிற்சியாளர். இந்த இளம் அணியை வைத்துக்கொண்டு அவர் அற்புதமான செயல்களை செய்து வருகிறார் என்றார்.

Summary

Nasser Al-Khelaifi calls Luis Enrique the world’s best coach after PSG triumph back to back Champions league

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.