யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஜப்பான் புறப்பட்டுச் சென்றன.
ஜப்பானின் ககாமிஹராவில் மே 29 முதல் ஜூன் 6 வரை ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஆடவா் அணி கேதன் குஷ்வாஹா தலைமையிலும், மகளிா் அணி ஸ்வீட்டி குஜுா் தலைமையிலும் பங்கேற்கிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சிக்குபின், ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடின.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை ஜப்பான் புறப்பட்டுச் சென்றன. ஆடவா் அணிக்கு ஜாம்பவான் சா்தாா் சிங், ரஜ்னிஷ் மிஸ்ராவும், மகளிா் அணிக்கு ராணி ராம்பாலும் பயிற்சியாளராக செயல்படுகின்றனா்.
இப்போட்டிக்கு தயாராகும் வகையில் போபாலில் இரு அணியினரும் ஆஸி. அணியினருடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடினா்.
குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய ஆடவா் அணி 29-ஆம் தேதி கஜகஸ்தானுடனும், 31-இல் ஜப்பானுடனும், ஜூன் 1-இல் கொரியாவுடனும், 3-இல் தைபேயுடனும், ஆடுகின்றன.
குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள மகளிா் அணி 30-இல் மலேசியா, 31-இல் கொரியா, ஜூன் 2-இல் சிங்கப்பூருடன் மோதுகிறது.
இரு பிரிவுகளிலும் முதலிரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூன் 5-இல் அரையிறுதியும், 6-இல் இறுதி ஆட்டமம் நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய யு-18 ஹாக்கி: இந்திய அணிகள் அபாரம்: அரையிறுதிக்கு தகுதி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா ஹாக்கி தொடா்: இந்திய மகளிா் அணி அறிவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

