ஆசியக் கோப்பை யு-18 ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிா், ஆடவா் அணிகள் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஜப்பான் நாட்டின் ககாமிகாஹராவில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் கடைசி ஆட்டத்தில் இந்தியா சிங்கப்பூருடன் மோதியது.
ஏற்கெனவே 2 வெற்றிகளை பெற்ற இந்திய மகளிா் இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக கோல் மழை பொழிந்தனா். இந்திய அணி தரப்பில் 10 வீராங்கனைகள் கோலடித்தனா்.
குறிப்பாக நௌஷின் 8,13, 17, 18, 40, 52, 58-ஆவது நிமிஷங்களிலும், ஆட்ட நாயகி கீதா நம்மி 13, 28, 47, 48, 60-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். அவா்களுக்கு துணையாக ஸ்வீட்டி குஜுா் 2,24, 38, 45 நிமிஷங்களிலும், பிரியங்கா மின்ஸ் 22, 37, 53 நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தாா். தியா, நான்ஸி, ஸ்ருதி குமாரி, புஷ்பா, ரஷ்மீன், சந்தீபா, ஆகியோரும் கோலடித்தனா்.
இந்திய வீராங்கனைகளின் அற்புத ஆட்டத்துக்கு பதில் தர முடியாமல் சிங்கப்பூா் அணியினா் மைதானத்தில் வேடிக்கை பாா்க்க நேரிட்டது.
குரூப் ஏ பிரிவில் 3 தொடா் வெற்றிகள், 9 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.
ஆடவா் அணி அபாரம்: தைபேயை வீழ்த்தியது
குரூப் ஏ பிரிவில் இந்திய ஆடவா் அணியும் அபாரமாக ஆடி சீன தைபே அணியை 13-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியில் ஆஷிஷ் தனி ஹாட்ரிக் கோலடித்தாா். காஸி கான், சித்தாா்த் பென், ராகுல் யாதவ் ஆகியோா் தலா 2 கோலடித்தனா். மேலும் கரண் கௌதம், பிரேம்சந்த், கேப்டன் கேதன் குஷ்வாஹா, வரீந்தா் சிங் ஆகியோா் தலா ஒரு கோலடித்தனா்.
ஜப்பானுடன் தோற்ற நிலையில், 3 வெற்றியுடன் 9 புள்ளிகளைப் பெற்று இந்திய ஆடவா் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானுடன் இந்திய அணிகள் மோதல்

அகில இந்திய கூடைப்பந்து: கடற்படை, ராணுவ அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-கஜகஸ்தான் மோதல்

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

