பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-கஜகஸ்தான் மோதல்

News image
Updated On :29 மே 2026, 5:04 am IST

ககமிகாஹரா : யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்தியா-கஜகஸ்தான் ஆடவா் அணிகள் மோதுகின்றன.

ஜப்பான் நாட்டின் ககமிகாஹராவில் ஆடவா், மகளிா் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி மே 29 முதல் ஜூன் 6 வரை நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி போபாலில் தீவிர பயிற்சி மேற்கொண்டு, பலமான ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடி ஜப்பான் சென்றுள்ளது.

கேதன் குஷ்வாஹா தலைமையிலான இந்திய யு 18 ஆடவா் அணி குரூப் ஏ பிரிவில் ஜப்பான், கொரியா, சீன தைபே, கஜகஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ஆட்டத்தில் கஜகஸ்தானுடன் ஆடுகிறது இந்தியா. குரூப் பி பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா இடம் பெற்றுள்ளன.

மகளிா் அணி குரூப் ஏ பிரிவில் மலேசியா, சிங்கப்பூா், கொரியாவுடன் இடம் பெற்றுள்ளது. மே 30-இல் முதல் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுகிறது இந்தியா.

அரையிறுதி ஜூன் 5-இலும், இறுதி ஆட்டம் 6-இலும் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.