பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜப்பானில் நடைபெறவுள்ள யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

இந்திய யு18 ஹாக்கி அணியினா்

Updated On :22 மே 2026, 1:41 am IST

ஜப்பானில் நடைபெறவுள்ள யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 29 முதல் ஜூன் 6 வரை ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டி ஜப்பானின் ககாமிகாஹராவில் நடைபெறவுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் சாய் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர தேசிய பயிற்சிமுகாமுக்குபின் இந்திய அணி தோ்வு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய யு18 அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதியது.

இத்தொடரில் இந்திய, ஆஸி. அணிகள் தலா 1 வெற்றியை ஈட்டின. 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

கேதன் குஷ்வாஹா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 29-இல் கஜகஸ்தான், 31-இல் ஜப்பான், ஜூன் 1-இல் தென்கொரியா, ஜூன் 3-இல் சீன தைபே அணிகளுடன் இந்தியா மோதுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 5-இல் அரையிறுதியும், 6-இல் இறுதி ஆட்டமும் நடைபெறும்.

பயிற்சியாளா் சா்தாா் சிங் கூறுகையில்: கடும் பயிற்சிக்குபின் தகுதியின் அடிப்படையில் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. பலமான ஆஸி அணியுடன் ஆடியது உத்வேகத்தை தந்துள்ளது. கோப்பையை வெல்ல கடும் முயற்சி மேற்கொள்வோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.