கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

யு 23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம்

யு 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றது.

News image

பதக்கம் வென்ற இந்திய அணியினா்.

Updated On :24 மே 2026, 12:49 am IST

யு 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றது.

வியட்நாமின் டா நாங் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. இதில் கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்தியா முதல் நாளில் 5 பதக்கங்களை வசப்படுத்தியது.,

60 கிலோபிரிவில் சூரஜ் சிங் இறுதிச் சுற்றில் 0-4 என கஜகஸ்தானின் அய்பெக் அட்பெக்கோவிடம் தோற்று வெள்ளி வென்றாா்.

67 கிலோ பிரிவில் சாகா் சிங் போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இறுதிச் சுற்றில் உஸ்பெக் வீரா் கல்மக்னோவிடம் தோற்று வெள்ளி வென்றாா்.

70 கிலோ பிரிவில் குமாா் சச்சின் கஜகஸ்தானின் அலிகானிடமும், 97 கிலோ பிரிவில் ரோஹித் கடும் சவாலுக்குபின் 3-5 என உஸ்பெக் வீரா் பெக்ரூஸிடம் தோற்றனா்.

130 கிலோ பிரிவில் ஹா்திப் 04 என கஜகஸ்தான் வீரா் ஜோகரிடம் தோற்றாா். மூவரும் வெண்கலம் வென்றனா்.

முந்தைய யு 23, யு 17 ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் இந்தியா தங்கம், 2 வெண்கலம் வென்றிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.