ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காலிறுதியில் மோதும் கௌஃப் - ஆண்ட்ரீவா!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

News image

கோகோ கெளஃப் - AP

Updated On :12 மே 2026, 2:08 am IST

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கெளஃப் 5-7, 7-5, 6-2 என, சக அமெரிக்கரான இவா ஜோவிச்சை தோற்கடித்தார். 8-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ûஸ வீழ்த்தினார். இதையடுத்து காலிறுதியில் கெளஃப் - ஆண்ட்ரீவா சந்திக்கின்றனர்.

இருவரும் இதுவரை 4 முறை மோதியிருக்க, அனைத்திலுமே கெளஃப் வென்றுள்ளார். கடைசியாக அவர்கள், கடந்த ஆண்டு இதே இத்தாலியன் ஓபன் காலிறுதியில் மோதியது குறிப்பிடத்தக்கது. 7-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற வகையில், செக் குடியரசின் நிகோலா பர்துன்கோவாவை சாய்த்தார்.

4-ஆம் இடத்திலிருப்பவரும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என எலிசபெத்தா கோசியாரெட்டோவை சவாலின்றி எளிதாகத் தோற்கடித்தார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 6-4 என ஜெர்மனியின் லாரா சிக்மண்டை வீழ்த்தினார்.

13-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 2-6, 4-6 என்ற நேர் செட்களில், 26-ஆம் இடத்திலுள்ள ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். சிர்ஸ்டி தனது காலிறுதியில், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவுடன் மோதுகிறார்.

ஆஸ்டபென்கோ முந்தைய சுற்றில், 6-1, 6-2 என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை எளிதாக வெளியேற்றினார்.

சின்னர், ரூபலேவ் முன்னேற்றம்: இத்தாலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரும், உள்நாட்டவருமான யானிக் சின்னர் 6-2, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை தோற்கடித்தார்.

20-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-7 (8/10), 1-6 என, இத்தாலியின் ஆண்ட்ரியா பெலெகிரினோவிடம் தோல்வியுற்றார். 4-ஆவது சுற்றில் சின்னர் - பெலெகிரினோ சந்திக்கின்றனர்.

போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-4, 6-4 என, ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை வென்றார். அடுத்து அவர், ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை எதிர்கொள்கிறார். பாசிலாஷ்விலி 7-6 (7/5), 6-4 என 30-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை வெளியேற்றினார்.

இதர ஆட்டங்களில், 9-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக், 16-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பால் ஆகியோர் எதிர்பாராத தோல்வியுடன் விடைபெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.