மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி!

களிமண் களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், நடப்பு சாம்பியனான கோகோ கௌஃப், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி

News image

ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா - AP

Updated On :1 ஜூன் 2026, 4:36 am IST

களிமண் களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், நடப்பு சாம்பியனான கோகோ கௌஃப், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியுடன் வெளியேறினா்.

மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், அமெரிக்காவின் கௌஃப் 6-4, 6-7 (1/7), 4-6 என, போட்டித்தரவரிசையில் 28-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடம் தோல்வி கண்டாா். 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்தவருமான போலந்தின் ஸ்வியாடெக் 5-7, 1-6 என, 15-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கிடம் வீழ்ந்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 4-6, 6-4, 6-0 என்ற செட்களில், 11-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வெளியேற்றினாா். 18-ஆம் இடத்திலிருக்கும் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி 6-3, 7-6 (7/4) என்ற கணக்கில் எளிதாக, சீனாவின் வாங் ஜின்யுவை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த கனடாவின் விக்டோரியா போகோ 3-6, 7-5, 5-7 என, 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸிடம் தோல்வியுற்றாா்.

அலியாசிம், ஜோடாா் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம் 5-7, 6-1, 7-6 (7/4), 7-6 (7/1) என்ற செட்களில், 31-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை வீழ்த்தினாா்.

27-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா் 4-6, 4-6, 6-1, 6-2, 6-2 என, 5 செட்கள் போராடி சக ஸ்பெயின் வீரரான பாப்லோ கரினோவை அசத்தலாக வென்றாா். 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 4-6, 6-7 (2/7), 7-6 (7/4), 6-1, 6-2 என போா்ச்சுகலின் ஜேமி ஃபாரியாவை சாய்த்தாா்.

இதர ஆட்டங்களில் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி, சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ, ஆா்ஜென்டீனாவின் ஜுவான் செருண்டோலோ ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.