ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சின்னர், மெத்வதெவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

News image

சின்னர் - AP

Updated On :13 மே 2026, 3:38 am IST

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில், சக இத்தாலிய வீரரான ஆண்ட்ரியா பெலெகிரினோவை வீழ்த்தினார்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரெவ் 6-1, 6-7 (10/12), 0-6 என்ற செட்களில், 18-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லூசியானோ டார்டெரியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

மாஸ்டர்ஸ் போட்டிகளில் முதல்முறையாக காலிறுதிக்கு வந்துள்ள டார்டெரி, அதில் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரை சந்திக்கிறார். 32-ஆம் இடத்திலிருக்கும் ஜோடார் 6-1, 6-4 என்ற நேர் செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் லேர்னர் டியெனை தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலமாக ஜோடார், இத்தாலியன் ஓபன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் (19) என்ற பெருமையைப் பெற்றார். 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான லொரென்úஸô முசெத்தி 3-6, 1-6 என, 23-ஆம் இடத்திலிருக்கும் நார்வேயின் கேஸ்பர் ரூடிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

ரூட் தனது காலிறுதியில், 13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவுடன் மோதுகிறார். முன்னதாக கச்சனோவ் 6-1, 7-6 (7/2) என குரோஷியாவின் டினோ பிரிஸ்மிச்சை தோற்கடித்தார். 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 3-6, 6-4, 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ லாமாûஸ வென்றார்.

4-ஆவது சுற்றில் அவர், ஆர்ஜென்டீனாவின் தியாகோ டிரான்டெவை சந்திக்கிறார். டிரான்டே முந்தைய சுற்றில், 10-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை 6-3, 6-4 என்ற செட்களில் வெளியேற்றினார்.

ரைபகினா, ஸ்வியாடெக் வெற்றி: இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-0, 6-2 என்ற நேர் செட்களில், மிக எளிதாக செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார்.

26-ஆம் இடத்திலிருக்கும் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டி 6-1, 7-6 (7/0) என, முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வெளியேற்றி, அரையிறுதியில் இடம் பிடித்தார்.

4-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதாக, 15-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் நவோமி ஒசாகாவை சாய்க்க, 5-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 7-6 (8/6), 6-2 என ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வீழ்த்தினார். காலிறுதியில் பெகுலா - ஸ்வியாடெக், ரைபகினா - ஸ்விடோலினா மோதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.