இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக யானிக் சின்னர், அரினா சபலென்கா பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள்.
முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர் பட்டம் வென்று தனது ஆதிக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் - யானின் சின்னர் மோதினார்கள். இந்தப் போட்டியில் 7-6 (6), 7-6 (4) என்ற செட்களில் சின்னர் போராடி வென்றார்.
இதுவரை 10 முறை இருவரும்போத, 9ஆவது முறையாக சின்னர் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். கலிஃபோர்னியா பாலைவன தொடர் என அழைக்கப்படும் இண்டியன் வெல்ஸ் தொடரில் முதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்.
அரையிறுதியில் மெதவ்தேவ் உலகின் நம்.1 வீரரான அல்கராஸை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டிக்குப் பிறகு சின்னர், “டென்னிஸ் மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் இத்தாலிக்கு சிறப்பான நாள்” எனக் கூறியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிசில் அரினா சபலென்கா 3-6, 6-3, 7-6 (6) என்ற செட்களில் எலேனா ரைபாகினாவுடன் வென்றார். இது சபலென்காவின் முதல் இண்டியன் வெல்ஸ் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023, 2025ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சபலென்கா இந்தமுறை பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்தப் போட்டியின்போது வெப்பநிலை 90 ஃபாரன்ஹீட் வரைச் சென்றதும் கவனிக்கத்தக்கது.
போட்டிக்குப் பிறகு சபலென்கா, “இந்தத் தொடரில் என்ன ஆனாலும் மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டுமென இருந்தேன். அந்தப் போராட்ட குணம்தான் என்னை இங்கு நிறுத்தி இருக்கிறது” என்றார்.
Summary
Jannik Sinner, Aryna Sabalenka claim their first titles at Indian Wells.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மியாமி ஓபனில் பட்டம்..! சன்ஷைன் டபுள் சாதனையும் படைத்த சின்னர்!

மியாமி ஓபனில் பட்டம்: சன்ஷைன் டபுள் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த சபலென்கா!

முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்! கோப்பை வெல்வாரா?

2026-ல் முதல் தோல்வியைச் சந்தித்த அல்கராஸ்..! தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மெத்வதேவ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


