டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான யானிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் அரையிறுதியில் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் யானிக் சின்னர், முதல்முறையாக இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சின்னர் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரையிறுதியில் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் மிகவும் அதிரடியாக விளையாடினார்.
இந்தப் போட்டி 1 மணி நேரம் 24 நிமிஷத்தில் முடிவடைந்தது. சின்னர் 6-2, 6-4 என்ற செட்களில் அபார வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நான்குமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சின்னர், போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் ஸ்வரெவை தொடர்ச்சியாக 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் உடன் சின்னர் மோதுகிறார். அரையிறுதியில் மெத்வதேவ் அல்கராஸை வீழ்த்தினார்.
கடந்த 2023, 24ஆம் ஆண்டுகளில் அரையிறுதியில் அல்கராஸிடம் தோல்வியுற்ற சின்னர், கடைசியாக நடந்த ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடர்களில் அனைத்து (6) கடின தரை போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டியில் வென்று சாதனை நிகழ்த்த காத்திருக்கும் சின்னருக்கு மெத்வதேவ் அதிர்ச்சி அளிப்பாரா என டென்னிஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Summary
Sinner, who fell in the Indian Wells semi-finals to eventual champion Alcaraz in 2023 and 2024, has now reached the final of all six hardcourt ATP Masters 1000 events.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!

2026-ல் முதல் தோல்வியைச் சந்தித்த அல்கராஸ்..! தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மெத்வதேவ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


