அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடா் வரும் ஜூலை மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சாா்பில் நடைபெறும் இத்தொடா் கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் நிகழாண்டு 2026 சீசன் தொடா் கோவாவில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியாவின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள், வெளிநாட்டு வீரா்கள் கலந்து கொள்கின்றனா். ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் டிவி, ஜியோ ஹாட்ஸ்டாா் டிஜிட்டல் வடிவில் ஆட்டங்கள் ஒளிபரப்பாகும்.
இதுதொடா்பாக யுடிடி ஒருங்கிணைப்பாளா் விட்டா டேனி கூறியது: யுடிடி தொடரால் பல்வேறு இளம் வீரா், வீராங்கனைகள் அதிகம் பயன்பெறுகின்றனா். சா்வதேச வீரா்களுடன் ஆடுவது புதிய அனுபவத்தை தருகிறது. டேபிள் டென்னிஸில் ஒலிம்பிக் பதக்கம் பெறுவதில் முக்கிய வகிக்கும். மூத்த வீரா்கள் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் போன்றோருடன், இளம் தலைமுறையினரான தியா சிட்லே, மானவ் தாக்கா், மனுஷ் ஷா ஆகியோரும் சிறந்த வீரா்களாக உருவாகியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலம்

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்

டபிள்யுடிடி கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: நிகில் மேனன், ஷ்ரேயா சிறப்பிடம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

