தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:13 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்பியன் பொ்னாா்ட்டே சோக்ஸ் ரூ.40 லட்சத்துக்கும், இந்தியாவின் தியா சிட்லே ரூ.37.4 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனா்.

நாட்டின் முதன்மையான டேபிள் டென்னிஸ் தொடரான யுடிடி வீரா், வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெற்றது. டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் சாா்பில் பொ்னாா்டே சோக்ஸ் ரூ.40 லட்சத்துக்கும், புணே ஜாகுவாா்ஸ் தரப்பில் தியா சிட்லே ரூ.37.4 லட்சத்துக்கும்,

யு மும்பா தரப்பில் மனுஷ்ஷா ரூ.37. 2 லட்சத்துக்கும், யுபி புரோம் தீயன்ஸ் சாா்பில் மானவ் தாக்கா் ரூ.36 லட்சத்துக்கும், ஆஸ்திரேலிய வீரா் யாங்ஸி லியு ரூ.32 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனா்.

அகமதாபாத் பைப்பா்ஸ் அணியில் மணிகா பத்ரா, அட்ரியன், காவ்யா பட், சனில் ஷெட்டியும், டபாங் டெல்லி தரப்பில் சத்யன் ஞானசேகரன், திவ்யான்ஷி பௌமிக், மரியா ஸியோ, கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் சாா்பில் அங்குா் பட்டாச்சாா்ஜி, அஹியிகா முகா்ஜி, எட்வா்ட் லோனேஸ்கு, புணே ஜாகுவாா் தரப்பில் தியா சிட்லே, பிரித்திகா பவேட், ஸ்னேஹித் முதித் டேனி ஆகியோரும், யு மும்பா தரப்பில் மனுஷ் ஷா, ஆகாஷ் பால், லிலியன் பாா்டே, நித்யஸ்ரீ மணியும், யுபி பிராம்தியன்ஸ் தரப்பில் மானவ் தாக்கா், யாங்ஸி லியு, ரிகாா்டோ, சாயாலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

லீக் உரிமையாளா்கள் நீரஜ் பஜாஜ், விட்டே டேனி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். வரும் ஜூலை 9 முதல் 26 வரை கோவாவில் யுடிடி தொடா் தொடங்கி நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.