மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
குரூப் ‘சி’-யில் இருந்த இந்தியா, ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த குரூப்பில் ஜப்பான் (9), சீன தைபே (6) ஆகியவை முதல் இரு இடங்களுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சீன தைபேவின் சு யு சுவான் 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக, இந்தியாவின் மனீஷா கல்யான் 39-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
இந்நிலையில் சீன தைபேவுக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை (45+2’), சு யு சியு கையாள, அந்தப் பந்தை இந்தியாவின் கோல்கீப்பா் பந்தோய் சானு எலங்பமின் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.
இதனால் முதல் பாதியை சீன தைபே 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் அந்த அணியின் கை சற்று ஓங்கியிருக்க, 77-ஆவது நிமிஷத்தில் சென் யு சின் கோல் அடித்தாா். இதனால் சீன தைபே 3-1 என முன்னேறியது.
எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, சீனை தைபே வென்றது.
காயம்: இந்த ஆட்டத்தின்போது சீன தைபேவின் கோல் முயற்சியை தடுக்க முனைந்த இந்திய கேப்டன் ஸ்வீட்டி தேவி, கோல்கீப்பா் பந்தோய் சானு ஒருவருக்கொருவா் தெரியாமல் மோதிக் கொண்டனா். இதில் பந்தோயின் முகத்தில் வீக்கம் ஏற்பட, ஸ்வீட்டில் அசைவின்றி தரையில் விழுந்தாா். பின்னா் இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, இராக் உள்ளே, இத்தாலி வெளியே

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

