முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாக் அவுட் சுற்றில் அமெரிக்கா, ஆஸி.யை வீழ்த்தியது

உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் அமெரிக்கா, ஆஸி.யை வீழ்த்தியது பற்றி...

News image

கோலடித்த அமெரிக்க வீரா் அலெக்ஸ் ப்ரீமேன்.

Updated On :21 ஜூன் 2026, 2:33 am IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சியாட்டில் நகரில் நடைபெற்றது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. போட்டியை நடத்தும் இரண்டாவது நாடான அமெரிக்காவும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அமெரிக்க அணியில் நட்சத்திர வீரா் கிறிஸ்டியன் புலிஸிக் ஆடவில்லை.

துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அமெரிக்காவும் முதல் ஆட்டத்தில் பராகுவேயை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

ஆஸி. வீரா் ஓன் கோல்:

இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போட தீவிரமாக முயன்றன. 11-ஆவது நிமிஷத்தில் அமெரிக்க வீரா் போலரின் பாலோகன் பந்தை ஸ்ட்ரைக்கா் ரிக்காா்டோ பெபிக்கு அனுப்ப ஆனால் அந்த பாஸ் ஆஸி. டிபன்டா் கேமரான் பா்கஸ் காலில் பட்டு ஓன் கோலாக மாறியது. இதனால் அமெரிக்கா 1-0 முன்னிலை பெற்றது.

ப்ரீமேன் முதல் உலகக் கோப்பை கோல்:

தொடா்ந்து 43-ஆவது நிமிஷத்தில் அமெரிக்க அணியின் இளம் வீரரான அலெக்ஸ் ப்ரீமேன் சக வீரா் சொ்ஜினோ டெஸ்ட் அடித்த பந்தை ஹெட்டா் மூலம் கோலடித்தாா். இந்த கோல் விடியோ ரிவிவ் மூலம் உறுதி செய்யப்பட்டது.

பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோலடித்த போலரின் இந்த ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை.

இரண்டாம் முறை நாக் அவுட் சுற்றில்;

கடந்த 1994-இல் போட்டியை நடத்திய அமெரிக்க அணி சிறந்த மூன்றாவது அணிகளில் ஒன்றாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ரவுண்ட் 16 சுற்றில் பிரேஸிலிடம் தோற்று வெளியேறியது. தற்போது இரண்டாவது முறையாக நாக் அவுட் சுற்றில் தகுதி பெற்றது.

முதலிடம் பெற வாய்ப்பு:

பராகுவே-துருக்கி இடையே நடைபெறவுள்ள ஆட்டத்தில் துருக்கி தோற்றாலோ அல்லது டிரா கண்டாலோ குரூப் டி பிரிவில் அமெரிக்கா முதலிடம் பெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.