ஸ்காட்லாந்து - மொராக்கோ இடையேயான கால்பந்து உலகக் கோப்பை ஆட்டத்தில் 1-0 என மொராக்கோ த்ரில் வெற்றி பெற்றது.
கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கு முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ அணி தேர்வாகியது. முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலுடன் 1-1 என சமன்படுத்தியது.
பாஸ்டனில் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி போட்டியின் இரண்டாவது நிமிஷத்திலேயே கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியில் 1-0 என முடிய, இரண்டாம் பாதியில் இரண்டாவது கோல் அடிக்க மொராகோ எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. ஸ்காட்லாந்து அணியும் தனது முதல் கோல் அடிக்க திணறியது.
இந்தப் போட்டியில் மொராக்கோ அணியினர் 54 சதவிகித பந்தை தன்வசம் வைத்திருந்தார்கள். இருப்பினும் இரண்டாவது கோல் அடிக்க முடியாமல் திணறினார்கள்.
இந்தப் போட்டியில் மொத்தமாக 12 முறை கோல்கள் அடிக்க மொராக்கோ அணியினர் முயற்சித்தனர். ஸ்காட்லந்து அணியின் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு, பல கோல்களைத் தடுத்தார்.
கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லந்து - பிரேசில் உடனும், மொராக்கோ - ஹைதியுடன் மோதவிருக்கிறார்கள். டாப் 2 இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு குரூப் சியில் அதிகரித்துள்ளது.
Summary
Saibari scores in second minute to lift Morocco to 1-0 win over Scotland at WC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை: சமனில் முடிந்த பிரேசில் - மொராக்கோ ஆட்டம்!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகல தொடக்கம்...

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!

அமெரிக்காவில் அனுமதி மறுப்பு... நாடு திரும்பிய உலகக் கோப்பை நடுவருக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


