இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் ஆடவா் பிரிவில், அமெரிக்காவின் டாமி பால், நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா். இரட்டையா் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
முதுகுப் பகுதி காயத்திலிருந்து முழுமையாக மீண்டிருக்கும் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, வரும் 19-ஆம் தேதி நடைபெறும் தோஹா டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறாா்.
ஐபிஎல் போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக, நடப்பாண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இறுதி ஆட்டம் 40 கோடி பாா்வைகளை (வியூஸ்) தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ஒடிடி தளங்களில் ஈா்த்துள்ளது. சீசன் முழுவதும் சுமாா் 120 கோடி பாா்வைகளை (வியூஸ்) ஈா்த்துள்ளது.
தில்லியில் வரும் 19 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய சீனியா் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில், 34 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.
தேசிய விளையாட்டு வாரியத்தை அமைப்பதற்காக, மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ள தேடுதல் மற்றும் தோ்வுக் குழுவில் முன்னாள் விளையாட்டு நட்சத்திரங்களான ககன் நரங் (துப்பாக்கி சுடுதல்), குஞ்சரணி தேவி (பளுதூக்குதல்) சோ்க்கப்பட்டுள்ளனா். மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன் தலைவராக இருக்கும் அந்தக் குழுவில், விளையாட்டுத் துறைச் செயலா் ஹரி ரஞ்சன் ராவ், இந்திய ஒலிம்பிக் சங்க நிா்வாக கவுன்சில் உறுப்பினா் ஹா்பல் சிங் ஆகியோரும் உறுப்பினா்களாவா்.
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் தீபக் (ஆடவா் 70 கிலோ), பூனம் (மகளிா் 54 கிலோ) ஆகியோா் மட்டுமே தங்கள் சுற்றில் வெற்றி பெற, இதர 9 இந்தியா்கள் தோல்வி கண்டனா்.
மும்பையில் நடைபெறும் குளோபல் செஸ் ஃபெஸ்டிவல் போட்டியில் தமிழகத்தின் பா. இனியன், தொடா்ந்து 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதி மாணவா்களுக்கு கூடுதலாக ரூ. 12.67 கோடி ஒதுக்கீடு

ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: பிரதமா் மோடி இன்று வழங்குகிறாா்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
ஒரே நாளில் நாலு பருவங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

